இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக்கூடாது: டாக்டர் ராமதாஸ்

ramdoss
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக்கூடாது: டாக்டர் ராமதாஸ்
siva| Last Updated: புதன், 23 ஜூன் 2021 (17:21 IST)
சேலத்தில் வியாபாரி ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்ததால் இறந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வணிகர் முருகேசன் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக்கூடாது

வணிகர் முருகேசன் தாக்கப்படும் காட்சிகள் மனதை பதற வைக்கின்றன. தம்மை தாக்க வேண்டாம் என்று முருகேசன் கதறும் போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி நடுசாலையில் வைத்து தாக்குவது மிருகத்தனமானதாகும். அதை மன்னிக்க முடியாது!

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு அதே நாளில் வணிகர் முருகேசன் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட வணிகர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :