டெல்டா பிளஸ் வைரஸுக்கு ஈடு கொடுக்காத தடுப்பூசிகள்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, டெல்டா பிளஸ்க்கு எதிராக குறைந்த வீரியத்துடன் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் தற்போது டெல்டா + வகை வைரஸாக உருமாறியுள்ளது. இந்த வைரஸ் இன்னும் அதிகம் பரவவில்லை எனவும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளில் இந்த வைரஸ் வகை காணப்படுவதாகவும் இந்தியாவில் இப்போது தான் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, டெல்டா பிளஸ்க்கு எதிராக குறைந்த வீரியத்துடன் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பைசர், கோவிஷீல்ட் போன்றவை டெல்டா வைரஸ்க்கு எதிராக ஒரு டோஸ் செலுத்தியவர்களுக்கு 33% எதிர்ப்பு திறன் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.