செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (18:59 IST)

நீட் தேர்வில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு...

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

தேசிய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 6 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் விண்ணப்பிக்கும் தேதியை ஆகஸ்டு 10 வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளத என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில்  நீத் தேர்வு நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரப்படும் என தேர்தலின்போது அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.