1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (11:45 IST)

நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கவும் - பள்ளிக்கல்வித் துறை

அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அலை ஒருவேளை உருவானால் தேதி மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கூடுதல் தேர்வு மையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகம் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. 
 
இதனிடையே, நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. ஆம், அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். உரிய நடைமுறையை பின்பற்றி ஆக்ஸ்ட் 6 ஆம் தேதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணபிக்க நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.