1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dayanidhi maran says about rador

சென்னை மக்கள் தவிப்பிற்கு மத்திய அரசே காரணம்: தயாநிதி மாறன் எம்பி

சென்னை
சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்ததற்கு மத்திய அரசே காரணமென திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார் 
 
மத்திய அரசு ரேடார் கருவிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அதனை சரியான நேரத்தில் சரிசெய்யாததால் தான் சென்னையில் நேற்று பெய்த மழை குறித்த முன்னறிவிப்பு வெளிவரவில்லை என்றும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.  
 
இதனால் நேற்று சென்னை பெரு மழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்தற்கு மத்திய அரசே காரணம் என்றும் ரேடார்களை உடனடியாக மத்திய அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கேட்ட மழை நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை: சவுமியா சுவாமிநாதன்