தொடர்புடைய செய்திகள்
- சென்னை மெரீனாவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: காவல்துறை அறிவிப்பு!
- தமிழகத்தை சுற்றிதான் என் எண்ணங்கள் உள்ளது! – ராகுல்காந்தி ட்வீட்!
- தமிழ்நாடு, புதுச்சேரியில் 59% அதிக மழை பதிவு!!
- நேற்றைய மழையைக் கணிக்காதது ஏன்? வானிலை ஆய்வுமையம் பதில்!
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ரூபா குருநாத்!
சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு!
சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பது காரணத்தாலும் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தாலும் சென்னை பெருநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது
சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கி உள்ள சுரங்கப் பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழை நீரை மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகல் அந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ஒருசில சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் பொதுமக்கள் மாற்று சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் கேகே நகர், ராஜமன்னார் சாலை, கேபி தாசன் சாலை, ராஜரத்தினம் மைதானம் சாலை, திருமலைப்பிள்ளை சாலை, பிரகாசம் சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
