டெல்டாவை முந்தியது ஒமிக்ரான்?; அதிகரிக்கும் பரவல் – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் டெல்டாவின் இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து தற்போது கட்டுக்குள் வந்த நிலையில் புதியதாக பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1200 ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் முன்னதாக டெல்டா வகை கொரோனா பரவியதற்கு மாற்றான இடத்தை ஒமிக்ரான் பிடித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்டா போல ஒமிக்ரானும் பரவும் நிலையை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.