1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:06 IST)

சென்னை மெரீனாவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: காவல்துறை அறிவிப்பு!

நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சென்னை மெரினாவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என சென்னை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது
 
தற்போது சென்னை மெரினா மணற்பரப்பில் இருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் எனவே இன்றும் நாளையும் சென்னை மெரினாவில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே நாளை புத்தாண்டு தினத்தில் சென்னை மெரினாவுக்கு அதிக பொதுமக்கள் கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது காவல்துறையின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது