1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jcd prabhakar says youth are watcing live

நீங்க சொல்லிக்கொடுங்க!.. இளைஞர்கள் கேட்ட கேள்வி!.. ஷாக்கான ஜே.சி.டி பிரபாகர்!..

jcd prabakar
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருந்தவர் ஜேசிடி பிரபாகர். 1980 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் இவர் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜே.சி.டி பிரபாகருக்கு உள்ள அனுபவத்தை புரிந்து கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரை சபாநாயகராக அமர வைத்தார். அவரின் கணிப்பு தவறவில்லை. சட்டசபையை மிகவும் நேர்த்தியாகவும், கண்ணியமாகவும் ஜே.சி.டி பிரபாகர் நடத்தி வருகிறார்..

சட்டபையில் ஜே.சி.டி பிரபாகர் கூறும் ‘அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது’ என்கிற வசனம் நெட்டிசன்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டது. அது மீம்ஸாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில்தான் இன்று சட்டசபையில் பேசிய ஜே.சி.டி பிரபாகர் ஒரு தகவலை கூறினார்.

நேற்று நான் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் சென்றிருந்தேன்.. அப்போது ஒரு இளைஞர் கூட்டம் என்னிடம் வந்தது ‘எங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் சட்டமன்ற நேரலையை பார்க்கும்போது அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது.. நேரலை மற்றும் அவைக்குறிப்பு பற்றி பேசினீர்கள்.. நீங்கள் ஏன் உறுப்பினர்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்காதபடிக்கு கண்ணியத்தோடு பேச கற்றுக் கொடுக்கக் கூடாது?’ என அவர்கள் என்னிடம் கேட்டனர். அதையும் மீறி பேசுபவர்கள் நேரலை மூலம் மக்களிடம் அம்பலப்பட்டால் என்ன’ என்றும் மக்கள் கேட்கிறார்கள்’ என அவர் கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பெண்ணை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்!.. சேலத்தில் அதிர்ச்சி..