செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (12:02 IST)

விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளில் மாமியார், மருமகள் வெற்றி!

விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளில் மாமியார், மருமகள் வெற்றி!
விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிட்ட மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர் சந்தோசமாய் உள்ளனர்
 
இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 26 வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சித்தேஸ்வரி என்பவர் போட்டியிட்டார்
 
இதனை அடுத்து 27வது வார்டில் சித்தேஸ்வரியின் மாமியார் பேபி போட்டியிட்டார். இருவருமே காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நிலையில் தற்போது முடிவுகள் வெளிவந்த நிலையில் இருவருமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவருமே வெற்றி பெற்றதை அடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்