புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:43 IST)

வெற்றி மழையில் விஜய் மக்கள் இயக்கம்! – ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

வெற்றி மழையில் விஜய் மக்கள் இயக்கம்! – ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்று வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுவரை வெளியான தேர்தல் வெற்றி முடிவுகளில் 4 வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நின்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முன்னதாக நடந்த 9 மாவட்ட கிராமப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான வெற்றியை பெற்றது. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி வெற்றிகளை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #VijayMakkalIyakkam என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.