தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் பேசினால் முன்ஜாமீன் ரத்து – பா ரஞ்சித்துக்கு நீதிமன்றம் நிபந்தனை !
- ’கண்மாய் விற்பனைக்கு‘ – மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர் !
- அடிமை, டயர்நக்கின்னு சொல்லாம இருப்பாங்களா?- மதுரை எம்.எல்.ஏவின் ட்விட்டர் சர்ச்சை
- பேச்சுரிமைக்கு ஒரு வரம்பில்லையா ? – ரஞ்சித்துக்கு நீதிமன்றம் கேள்வி !
- பா ரஞ்சித் கைது தடை நீட்டிப்பு இல்லை – நீதிமன்றம் அறிவிப்பு !
பள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம் – மதுரையில் சோகம் !
மதுரையில் பள்ளி ஒன்றில் பால்கனி இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறம் உள்ளது ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளி சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. சுமார் 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல பள்ளி தொடங்கி நடந்துகொண்டிருக்கும் போது முதல் மாடியில் இருந்த கைப்பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கீழே நின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களான சக்திவேல், குமரவேல், வீரக்குமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக பள்ளிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சோக சம்பவத்தால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
