புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (08:52 IST)

’கண்மாய் விற்பனைக்கு‘ – மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர் !

மதுரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரண்டு கண்மாய்கள் விற்பனைக்கு உள்ளதாக அடித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பருவமழை சரியாகப் பெய்யாத காரணத்தால் கண்மாய்கள், ஆறுகள், ஏரிகள் வற்றிப் போயுள்ளன. இந்த வறட்சியைப் பயன்படுத்தி சிலர் கண்மாய் நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் மற்றும் வீடு கட்டிக்கொள்ளுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேப்போல மதுரையில் ஊமச்சிகுளம் பகுதியிலுள்ள இடந்தகுளம் கண்மாய், பண்ணைகுடி பகுதியிலுள்ள அம்மன்குளம் கண்மாய் ஆகியவற்றைச் சட்டவிரோதமாகச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். இதனை குறிப்பிடும் விதமாக நேற்று மதுரையில் கண்மாய்கள் விற்பனைக்கு எனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘
  • கண்மாய் பகுதிகளில் வீடு கட்டிக் குடியேறலாம்
  • மறுவிற்பனை மூலம் கோடிகோடியாக வருமானம் பார்க்கலாம்
  • முதலில் வரும் 100 ஏழைகளுக்கு 2 செண்ட் இலவசம் 
என சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியின் கீழ் பாஜக கட்சியின் பொறுப்பாளர் சங்கரபாண்டி என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.