1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cyclone will cross between chennai and andhra pradesh

சென்னை அருகே கரையை கடக்கின்றதா ‘மிக்ஜாம்’ புயல்? வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததென்ன?

சென்னை
வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘மிக்ஜாம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது  
 
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் இந்த புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  
 
டிசம்பர் மூன்றாம் தேதி வங்க கடலில் இந்த புயல் வலுப்பெறும் என்றும், தற்போது சென்னையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை அருகே புயல் கரையை கடப்பது உறுதி செய்யப்பட்டால் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
புயலுக்கு முன் அமைதி.. இன்று பெரிய அளவில் மழை இருக்காது: தமிழ்நாடு வெதர்மேன்