செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (10:11 IST)

புயலுக்கு முன் அமைதி.. இன்று பெரிய அளவில் மழை இருக்காது: தமிழ்நாடு வெதர்மேன்

புயலுக்கு முன் அமைதி இருக்கும் என்பதால் இன்று தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
இன்று காலை முதல் நாளை வரை  வானிலை அமைதியாக இருக்கும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை போன்ற பகுதியில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் 
 
இந்த புயல் எங்கே செல்கிறது என ட்ராக்கிங் செய்யப்பட்டு வருகிறது என்றும் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் இடம் துல்லியமாக தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.  
 
இன்று வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி வருவதால் பெரும்பாலும் தமிழ்நாட்டில் மழை இருக்காது என்றும் ஆனால் புயல் கரையை கடக்கும் போது கன மழை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
 நாளை புயல் சின்னம் உருவாகி அதன் பிறகு ஓரிரு நாளில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran