திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:47 IST)

காலை உணவுத்திட்டம் தனியாருக்கு இல்லை: கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய சென்னை மாநகராட்சி..!

Chennai Corporation
பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் தீர்மானம் ஏற்றிய நிலையில் தற்போது கடும் எதிர்ப்பு காரணமாக காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என்று அறிவித்துள்ளது.  

காலை உணவு திட்டத்தை  தனியாருக்கு விடப்போவதாக சென்னை மாநகராட்சி தீர்மானம் இயற்றிய போது கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை அடுத்து காலை உணவு திட்டத்தை மீண்டும் சென்னை மாநகராட்சி நடத்தும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

 காலை உணவு திட்டத்தை தனியாருக்கு விடுவதற்கான ஒப்புதல் மாநகராட்சியில் தரப்பட்டாலும் ஒப்பந்த புள்ளிகளும் தற்போது கோரப்படவில்லை என்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வழங்குவது என்றும் இந்த திட்டமானது தொடர்ந்து மாநகராட்சியால் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் தினசரி உணவு வழங்க வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Edited by Siva