1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cyclone cross near Chennai In evening

சென்னையை நெருங்கும் காற்றழுத்த மண்டலம்..! – மாலை கரையை கடக்கும்!

Tamilnadu
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வரும் நிலையில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று சென்னையில் கரையை கடக்க உள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னயிலிருந்து தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை சென்னை அருகே இது கரையை கடக்கும்போது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்திய தடை நீட்டிப்பு!