மெட்ரோ ரயில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ நிலையங்களிலும் மாச்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மெட்ரோ நிலையங்களிலோ அல்லது மெட்ரோ ரயில்களிலோ மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெட்ரோ நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்க அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி மெட்ரோ நிர்வாகம் விதித்த அபராத அறிவிப்பை ரத்து செய்துள்ளது.