1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (17:06 IST)

பாஜக ஐடி பிரிவு தலைவருக்கு சைபர் பிரிவு போலீஸார் சம்மன்!

பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்காக பசும்பொன்  வரவிருந்ததாகவும், தமிழகத்தில் பாதுகாப்பு உறுதி தமிழக அரசு உறுதியளிக்காத காரணத்தால் அவரது வருகை தள்ளிப்போனது  என்று அவதூறு பரப்பிய பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு சம்மன் அனுப்பப்படுள்ளது.

தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர்  நிர்மல் குமார் பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்காக பசும்பொன்  வரவிருந்ததாகவும், தமிழகத்தில் பாதுகாப்பு உறுதி தமிழக அரசு உறுதியளிக்காத காரணத்தால் அவரது வருகை தள்ளிப்போனது என்று கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி   தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,    இதுகுறித்து, மொகிந்தர் அமர் நாத் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்று அளித்தார்.
 
இதனையடுத்து, கடந்த மாதம் 14 ஆம் தேதி நிர்மல் குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த நிலையில், பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார், நாளை காலை 11 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் (சென்னை) விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
 
Edited by Sinoj