தொடர்புடைய செய்திகள்
- குஜராத் தொங்கு பால விபத்து; 140 பேர் பலி! – மு.க.ஸ்டாலின் இரங்கல்!
- 91 பேரை காவு கொண்ட குஜராத் தொங்கு பாலம் விபத்திற்கு காரணம் என்ன?
- குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு
- பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு: குஜராத் மாநில அமைச்சரவை ஒப்புதல்
- இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலம்: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!
என் வாழ்வில் இப்படி ஒரு வேதனையை பார்க்கவில்லை! – குஜராத் விபத்து குறித்து பிரதமர் உருக்கம்!
குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்தவிபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பிரம்மாண்டமான தொங்கு பாலம் ஒன்று மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த பாலம் புணரமைக்கப்பட்டு மறுதிறப்பு செய்யப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் பாலத்தில் நின்றுள்ளனர்.
அப்போது மக்களின் எடைய தாள முடியாமல் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதில் மக்கள் பலர் ஆற்றில் விழுந்தனர். பாலர் பாலத்தின் மீதங்களை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த பால விபத்தில் பலி எண்ணிக்கை 140ஐ கடந்துள்ளது. 117 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த துயர சம்பவம் குறித்து தனது இரங்கல்களை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி “நான் தற்போது ஏக்தா நகரில் உள்ளேன். ஆனால் என் மனதோ மோர்பி தொங்கு பால விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எண்ணிக் கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்விலேயே இதுபோன்ற வேதனையை அனுபவித்ததில்லை. ஒருபுறம் மனதில் வலி உள்ளது. மறுபுறம் கடமை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்துள்ளவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Edited By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
