1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cuddalore doctor dead

15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்.. பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!

doctor
15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்.. பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!
15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மருத்துவர் என பெயர் பெற்றிருந்த 91 வயது மருத்துவர் தாத்தாச்சாரியார் என்பவர் இன்று காலமானார். இதனை அடுத்து அவருக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்து வருகின்றனர். 
 
தனியார் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சிகிச்சைக்காக பணம் பெற்று வரும் நிலையில் கடலூரை சேர்ந்த தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் வெறும் 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். 
 
அவரிடம் வரும் நோயாளிகளுக்கு எந்த விதமான நோயாக இருந்தாலும் 15 ரூபாய்க்கு மேல் அவர் மருத்துவ கட்டணம் பெறுவதில்லை. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கடலூர் பகுதி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த மருத்துவர் தாத்தாச்சாரியார் இன்று காலமானார். அவருக்கு வயது 91. 
 
இதனை அடுத்து அவரது மறைவிற்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை முடக்கிய மத்திய அரசு