திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (20:10 IST)

திடீரென மயக்கம் ஏற்பட என்ன காரணம்?

faint
ஒரு சிலருக்கு திடீரென மயக்கம் ஏற்படும் என்பதும் சிலருக்கு மயக்கம் நீண்ட நேரமாக இருக்கும் 
 
இதயத்துடிப்பு, ரத்த சர்க்கரை அளவு அதிகம், ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயக்கம் வர வாய்ப்பு உண்டு என்றும் அதேபோல் மது அருந்துவது போதைப் பொருளுக்கு அடிமை ஆவது ஆகியவையும் மயக்கும் வர காரணம் என்றும் கூறப்படுகிறது. 
 
மயக்கத்தில் இருப்பவர்கள் சிலருக்கு இமை திறந்தால் கூட விழிகள் அங்கும் அங்கும் சுழலும் என்றும் மயக்கம் ஏற்பட்ட பிறகு உடனடியாக உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
பதட்டம் பயம் போன்ற உளவியல் காரணங்களும் மயக்கம் வருவதற்கு காரணம் என்றும் மயக்கத்தை தவிர்க்க தியானம் மற்றும் யோகாசனத்தை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran