1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmalkumar says dmk will face live

சட்டசபையில் மறுபடி திமுக அசிங்கப்பட போறாங்க!.. அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!...

nirmal kumar
சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் சர்காரியா கமிஷனர் அறிக்கையில் திமுக மீது கூறப்பட்டிருந்த புகார்கள் பற்றி பேசினார். அதேபோல் மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவர் பேசியது திமுகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக மிசா காலத்தில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும் என்று கூறி அவர் காட்டிய உடல்மொழி திமுகவினரை கோபப்படுத்தியது. அதாவது போலீசார் அடித்ததில் முக ஸ்டாலினின் தாடை உடைந்து போனதையே விஜய் மறைமுகமாக கிண்டலடித்திருக்கிறார் என அவர்கள் கோபப்பட்டனர்..

அப்போது சட்டசபையில் பேசிய அமைச்சர் சிடி நிர்மல் குமார் ‘ மிசா காலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் தொடர்பான புகர்கள் என பல வழக்குகளிலும் பலரும் கைது செய்யப்பட்டனர்.. முக ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மிசாவில் கைது செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை’ என கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிடி நிர்மல் குமாரையும், முதலமைச்சர் விஜயையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நிர்மல் குமார் ‘திமுகவினர் என் மீது உரிமை மீறல் புகார் கொடுத்திருக்கிறார்கள். மிசா மற்றும் சர்காரியா கமிஷன் பிரச்சனையை விட்டு விலகாமல் அதை மீண்டும் LIVE - லையே வைத்துக்கொண்டு அவர்கள் அசிங்கப்படுகிறார்கள்’ என கூறி இருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
என் தம்பியவே திட்றீங்களா?!.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!..