1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Covai student death issue Coach is not a NMDA candidate

கோவை மாணவி பலியான சம்பவம்: ஆறுமுகம் பயிற்சியாளரே இல்லை

கோவை
கோவையில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளர் என்.எம்.டி.ஏ பயிற்சியாளரே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் இரண்டாவது மாடியில் இருந்து குதிப்பது எப்படி என்ற பயிற்சியை லோகண்யா என்ற 19 வயது கல்லூரி மாணவிக்கு பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் பயிற்சி அளித்தார். கீழே மாணவர்கள் வலையுடன் தயார் நிலையில் இருந்தபோது பயிற்சியாளர் மாணவியை கீழே தள்ளிவிட்டார். ஆனால் எதிர்பாராத வகையில் முதல்மாடியின் சன்ஷேடில் விழுந்த லோகண்யா தலையில் பலமான காயமேற்பட்டு மரணம் அடைந்தார்.
 
இச்சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காரணமான பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஆறுமுகம் எம்.எம்.டி.ஏ பயிற்சியாளரே இல்லை என்றும் அவரிடம் இருக்கும் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பதையும் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். பயிற்சியாளரே அல்லாத ஆறுமுகம் தான் மத்திய அரசின் ஊழியர் என கூறி தொடர்ந்து 7 வருடமாக இப்படி செய்து வந்துள்ளார். 
 
பயிற்சி அளிப்பதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் இவர் தலா 50 வீதம் பெற்றுள்ளார். போலீஸார் தொடர்ந்து ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளது. இத்தனை நாளாய் இந்த போலி ஆசாமியை கண்டுபிடிக்காமல் ஒரு உயிரை காவு வாங்கியதற்கு பின், அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டுகிறது. எது எப்படியாயினும் ஒரு இளம்பெண்ணின் உயிர் போய்விட்டதே...
அடுத்த கட்டுரையில்
ரூம் போட்டு யோசிப்பாங்களோ; பாலியல் குற்றத்தில் சிக்கினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து