திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (08:34 IST)

மகள் இறந்ததை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டோம்: பயிற்சியில் பலியான மாணவியின் தந்தை

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற 19 வயது கல்லூரி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தபோது எதிர்பாராமல் முதல் மாடி சன்ஷேடில் மோதி பலியானார். இந்த பயிற்சியின்போது லோகண்யா பயம் காரணமாக குதிக்க மறுத்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம் கட்டாயப்படுத்தி மாணவியை குதிக்க வைத்துள்ளதாக தெரிகிறது.
 
லோகண்யா பலியான விவகாரம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் பலியானது குறித்து மாணவியின் தந்தை பேட்டியளித்தபோது, 'காலையில் கல்லூரி இருக்கிறது என்றுதான் கூறிவிட்டு தனது மகள் சென்றதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதே தங்களுக்கு தெரியாது என்றும் கூறினார். மேலும் தனது மகள் இறந்ததை யாரும் தங்களுக்கு உடனே தகவல் அளிக்கவில்லை என்றும், மாலைதான் லோகேஸ்வரி இறந்தது தெரியும் என்றும் அதுவும் டிவியில் செய்தி பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும் கல்லூரியில் இருந்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.
 
அதேபோல் தகுதி வாய்ந்தவர்களை வைத்துதான் பேரிடர் பயிற்சி முகாமை நடத்த வேண்டும் என்றும், கோவையில் மாணவி உயிரிழந்த சம்பவம் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டிய செயல் என்றும் பேரிடர்களில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றே என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.