1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Court order against on Speakder DMK case

திமுக தொடர்ந்த வழக்கு - சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

Speaker dhanapal
அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
கடந்த பிப்ரவர் மாதம் 18ம் தேதி சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்ட போது, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், அவர்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அந்நிலையில், ஓ.பி.எஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்தது. 
 
ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
அந்நிலையில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்த 8 மாத காலமாக சபாநாயகர் காலம் தாழ்த்தியது ஏன் என கோரி திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில், அந்த வழக்கு இன்று நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக வருகிற அக்டோபர் 12ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
சசிகலா வெளியே; தினகரன் உள்ளே: எடப்பாடியின் மாஸ்டர் பிளான்!