ஜெயலலிதா 6 மாதத்துக்கு முன்னர் சொன்னார்: அவர் இறந்து 10 மாதம் ஆயிடுச்சு அமைச்சரே!

ஜெயலலிதா 6 மாதத்துக்கு முன்னர் சொன்னார்: அவர் இறந்து 10 மாதம் ஆயிடுச்சு அமைச்சரே!


Caston| Last Modified புதன், 4 அக்டோபர் 2017 (11:08 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் விழுபுணர்வை ஏற்படுத்தி, நிலவேம்பு கஷாயத்தை குடிக்கச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

 
 
காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் உள்ள மாநில வன ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற மருத்துவ தாவரங்கள் சாகுபடி மற்றும் வர்த்தகம் தொடர்பான தேசிய பயிலரங்க துவக்க விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய வனக் காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நிலவேம்பு கசாயத்தை குடிக்கச் சொன்னதாக கூறினார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 10 மாதங்கள் ஆகும் நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அக்டோபர் இரண்டு காந்தி பிறந்த நாளை அவர் காந்தி நினைவு தினம் எனவும் குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :