1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (17:44 IST)

சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? நீதிமன்றம் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது புகார்கள் குவிந்துள்ள நிலையில் அந்த  புகார்களை விசாரிக்க சமீபத்தில் தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்தது. இந்த நிலையில் இந்த விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தனது மகளுக்கு முறைகேடாக பதவி கொடுத்ததாகவும் மேலும் சில முறைகேடுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என பதிவு செய்யப்பட்ட வழக்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மற்ற பல்கலைகழக துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் சூரப்பா மீதான விசாரணைக்கு மட்டும் உடனடியாக கமிஷன் அமைத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது