வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:26 IST)

சூரியின் நில மோசடி வழக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை!

சூரி கொடுத்த புகாரில் போலிஸார் சிறுசேரி ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் தயாரிப்பாளர் அன்பு வேலவன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது வழக்கை விசாரித்து வரும் குற்றப்பிரிவு போலீஸார் சிறுசேரி பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது தம்பியிடம் நில ஆவணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் வீட்டுமனை நிலைமா, அல்லது விவசாய நிலைமா என்பது தொடர்பான சான்றிதழை அந்த ஊராட்சி மன்ற தலைவர் நிலத்தை விற்கும் பொது சூரியிடம் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.