தொடர்புடைய செய்திகள்
- அரை டிக்கெட்டில் முழு படம்: தியேட்டரில் கொரோனா கால தள்ளுபடி
- பாரதிராஜா எடுத்தது தவறான முடிவு – கருணாஸ் கருத்து!
- பிரபுதேவா திருமணம் செய்துகொண்டது உண்மையா? குடும்ப உறுப்பினர் விளக்கம்!
- கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி! – வேல் யாத்திரை, பிரச்சாரத்திற்கு அனுமதி உண்டா?
- ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியுஸ் போஸ்டர் வெளியீடு!
ஒரே கிராமத்தில் இறந்து கிடந்த 80 பசுக்கள் – விலகாத மர்மம் குறித்து விசாரணை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த பசுக்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள பில்யூபாஸ் கிராமத்தில் தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த 80 பசுமாடுகள் ஒட்டுமொத்தமாக மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் நேரில் வந்து பார்வையிட்ட வட்டாட்சியர் பசுக்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார். அதையடுத்து இன்று முதல் அதற்கான விசாரணை தொடங்க உள்ளது.பசுக்களுக்கு வைக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன.
