1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. court allowed to open kaniyamur school

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்கலாமா? உயர்நீதிமன்றம் உத்தரவு

kaniyamur
கள்ளக்குறிச்சி கனியாமூர்  தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த பள்ளியில் பெரும் வன்முறை ஏற்பட்டது என்பதும் பள்ளி சூறையாடப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இதனையடுத்து பள்ளி காலவரையற்ற நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளியின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது 
 
மேலும் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு