திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (18:34 IST)

மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

tasmac
மது விற்பனை நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணிக்கு மேல் மாற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
 
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவது இல்லை என்றும் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்
 
மேலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மது விற்பனையை விற்பனை செய்ய ஏன் பரிசீலனை செய்யக் கூடாது? என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது 
 
Edited by Mahendran