செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (11:06 IST)

’துண்டு துண்டா வெட்டுவேன்’; பள்ளி மாணவிக்கு மிரட்டல்! – இளைஞர் அதிரடி கைது!

பள்ளி மாணவியை துண்டு துண்டாக வெட்டுவதாக கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷமன்கஞ்ச் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார். சிறுமி பள்ளிக்கு செல்லும்போது 21 வயதான முகமது பைஸ் என்ற இளைஞர் சிறுமியை பின் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் காதலிக்குமாறு தொல்லை செய்தும் வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள சிறுமியை வற்புறுத்த சிறுமி மறுத்துள்ளார். இதனால் முகமது பைஸ் ‘என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உன்னை துண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முகமது பைஸை பிடித்து கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலனாலேயே துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K