2022-23 ம் கல்வி ஆண்டின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கரூர் மாவட்ட அளவிலான குழு மற்றும் தனிநபர் விளையாட்டு போட்டிகளில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
ஜூடோ போட்டியில் ஆண்கள் பிரிவில் 6 தங்கப்பதக்கங்களும், 7 வெள்ளிப்பதக்கங்களும், 4 வெண்கலப்பதக்கங்களும், பெண்கள் பிரிவில் 5 தங்கப்பதக்கங்களும், 3 வெள்ளிப்பதக்கங்களும், 9 வெண்கலப்பதக்கங்களும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
கைப்பந்து போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
டென்னிஸ் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களும், 1 வெண்கலப்பதக்கமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
கேரம் போட்டியில் மொத்தமாக 6 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும், 3 வெண்கலப்பதக்கங்களும் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
தடகளப் போட்டியில் U-14 மாணவர்கள் பிரிவில் 100 மீ ஓட்டத்தில் முதலிடமும், 200 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், U-17 மாணவர்கள் பிரிவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடமும், 4x100 மீ ஓட்டத்தில் முதலிடமும், 4x400 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், U-17 மாணவியர்கள் பிரிவில் 3000 மீ ஓட்டத்தில் மற்றும் 1500 மீ ஓட்டத்தில் முதலிடமும், 200 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4x100 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், U-14 மாணவியர்கள் பிரிவில் நீளம் தாண்டுதல் மூன்றாமிடமும், U-19 மாணவியர்கள் பிரிவில் 3000 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
மேஜைபந்து போட்டியில் U-19 மாணவர்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், இரட்டையர் பிரிவில் இரண்டாமிடமும், U-19 மாணவியர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர்.
சிலம்பம் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும், 7 வெண்கலப்பதக்கங்களும் வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கப்பதக்கங்களும், 3 வெள்ளிப்பதக்கங்களும், 1 வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
டேக்வாண்டோ போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும், 9 வெண்கலப்பதக்கங்களும் ஒட்டு மொத்தமாக அதிகமான போட்டிகளில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அபார சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் S.மோகனரெங்கன் , செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் M.சுபாஷினி, பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
Edited By Sinoj