1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona Vaccine camp on this sunday

வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்

Corona Vaccine
இந்த வாரமும் வரும் 26 ஆம் தேதி மூன்றாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த 19 ஆம் தேதியும் சிறப்பு முகாம் போடப்பட்டது. 
 
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் ஆர்வமாக வருகை தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வாரமும் வரும் 26 ஆம் தேதி மூன்றாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அன்பில் மகேஷ் அறிவிப்பு!