செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (14:40 IST)

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம்

கொரோனாவுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளது. 

 
இந்தியாவில் இப்போது விறுவிறுப்பாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய ஊசிகள் அதிகளவில் போடப்படுகின்றன. இருந்தாலும் வெளிநாட்டு ஊசிகளும் போடப்படுகின்றன. 
 
கொரோனாவுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய தடுப்பூசி சான்றிதழுக்கு அங்கீகாரம் தர ஒன்றிய அரசு வலியுறுத்தி வந்த நிலையில் பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனில், கொரோனா தடுப்பூசிக்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 4 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.