வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (11:49 IST)

5 கைதிகளுக்கு கொரோனா உறுதி – புழல் சிறையில் சோதனை!

புழல் சிறையில் இருந்து மற்ற சிறைகளுக்கு சென்ற கைதிகளுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து புழல் சிறையில் கொரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகளில் சிலர் பயிற்சியை முடித்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த சிறைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் புழல் சிறையில் இருந்து கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து சென்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களிடம் பழகிய 74 கைதிகள், 19 காவலர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என்றும் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.