வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 மே 2020 (08:11 IST)

சிறை கைதிகளையும் விட்டு வைக்காத கொரோனா? – குழப்பத்தில் அதிகாரிகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள சிறை கைதிகளையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் வீரியமாக பரவி வரும் கொரோனாவால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கொரோனா பாதிப்பால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாண சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லம்போக் சிறைச்சாலையில் உள்ள 792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெர்மின்சல் தீவில் உள்ள மத்திய சிறைச்சாலையிலும் 644 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சிறைகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாமல் 11 சிறை அதிகாரிகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.