திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 27 மே 2020 (21:03 IST)

அயனாவரம் சிறுமி வழக்கின் குற்றவாளி சிறையில் தற்கொலை...

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில்  11 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக  17 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தணடணை விதிக்கப்பட்ட காவலாளி பழனி, சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததால் அவர் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில்  11 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்து செக்யூரிட்டி, லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 17 பேரின் மீதும் மகளிர் நீதி மனறத்தில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 17 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் அவரது உறவினர்கள் ’கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் மற்றும் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என மேல்முறையீடு செய்தனர்.

இதுதொடர்பான நேற்றைய விசாரணையில் ’குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான குற்றம் செய்திருந்தால் கைது செய்த 30 நாளைக்குள் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கப்பட வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் மீது 45 நாட்களுக்குப் பிறகே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதனால் அவர்கள் மீதான் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் அவா்களுக்கு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவா் சிறையிலேயே உயிரிழந்துவிட்டார்.

இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 15 பேரை குற்றவாளிகளிகளாக தீர்ப்பளித்து தோட்டகாரராக வேலை செய்து வந்த குணசேகரை விடுதலை செய்தது.

மேலும் இந்த வழக்கில் பழனி உள்ளிட்ட நான்கு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.