திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 மே 2020 (08:46 IST)

பஹ்ரைன் சிறையில் இருந்த கைதிகள் இந்தியா வருகை – சோதனைக்காக தனிமைப்படுத்தல்!

பஹ்ரைன் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இந்திய கைதிகள் 127 பேருக்கு அந்நாட்டு அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.

கொரோனா அச்சம் உலகெங்கும் பரவி வரும் நிலையில் கைதிகளுக்கு பல நாட்டு அரசுகளும் பொது மன்னிப்பு வழங்கி வருகின்றன. இதையடுத்து பஹ்ரைன் நாட்டில் சிறை தண்டனை பெற்று வந்த 127 இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இந்தியாவுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்தது பஹ்ரைன் அரசு.

கல்ப் ஏர்வேஸ் தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைத்தது. கொச்சியில், வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு, கொரோனா சோதனைக்காக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.