1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai house owner murderd by a house renter

வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர்; குத்திக் கொன்ற அஜித்! – குன்றத்தூரில் பரபரப்பு!

Tamilnadu
சென்னை அருகே குன்றத்தூரில் வாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளரை இளைஞர் ஒருவர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே குன்றத்தூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் வீட்டை அஜித் என்ற இளைஞருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக அஜித் வீட்டு வாடகை செலுத்தாத நிலையில் தொடர்ந்து வாடகை செலுத்துமாறு குணசேகரன் கேட்டு வந்துள்ளார். நேற்றும் அதேபோல குணசேகரன் வாடகை கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் வீட்டி உரிமையாளரை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் குணசேகரன் தப்பி ஓட அஜித் விரட்டி சென்று குத்தி கொன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாடகை கேட்டதற்காக வீட்டு உரிமையாளர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
காஷ்மீர் பாஜக பிரபலம் சுட்டுக்கொலை! – பயங்கரவாதிகள் சதியா?