1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai youngsters commite racing in lockdown areas

ஊரடங்கிலும் அடங்காத பைக் ரேஸர்கள்! – சென்னையில் தீவிர பாதுகாப்பு!

Tamilnadu
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை முழுவதிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பல இடங்களில் பைக் ரேஸ் நடைபெறுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னைவாசிகள் சிலர் நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் முறசொலிமாறன் மேம்பாலத்தில் இளைஞர்கள் பலர் பைக் ரேஸில் ஈடுபடுவதாக தெரிய வந்ததையடுத்து அங்கு முழுவதுமாக தடைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பனீயில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!