தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் தொடரில் முதல் முறையாக… ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்!
- நெட்பிளிக்ஸில் கலக்கும் ஸ்கிவிட் கேம்ஸ் இணையத் தொடர்!
- வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண்!
- வார்த்தையில் மோதிக்கொண்ட அஸ்வினும் டிம் சவுத்தியும்… விலக்கிவிட்ட தினேஷ் கார்த்திக்!
- 7 - 11 வயதுள்ளோருக்கான தடுப்பூசி பரிசோதனை - சீரம் நிறுவனத்திற்கு அனுமதி
புதுச்சேரியில் மேலும் 93 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,26,308 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,26,308 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1.23 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் 828 பேர் கொரோனா சிகிச்சை பெறுகின்றனர்.
