1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (11:01 IST)

7 - 11 வயதுள்ளோருக்கான தடுப்பூசி பரிசோதனை - சீரம் நிறுவனத்திற்கு அனுமதி

7 முதல் 11 வயதுள்ளோருக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு சீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஏற்கனவே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இதனிடையே 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனையை மேற்கொள்ளசீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 
 
முன்னதாக ஜைடஸ் காடிலா  நிறுவனத்தில் தயாரிப்பான டி.என்.எ. தடுப்பூசியை 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு அவசரகால பயன்பாடாக செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.