ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (12:01 IST)

கொரோனாவின் மையமான சென்னை மண்டலங்கள்!!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல். 
 
நேற்று தமிழகத்தில் 3,509 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக பாதிப்பு 3000ஐ தாண்டியுள்ளது  பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,509 பேர்களில் 1,834 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் சென்னையின் 15 மண்டலங்களில் அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6951 ஆக உயர்ந்துள்ளது. 
 
அதோடு சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. இதைத்தவிர்த்து தண்டையார்பேட்டையில் 5,717, திரு.வி.க நகரில் 3,981, தேனாம்பேட்டையில் 5,534 என கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.