திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (17:11 IST)

ஆசிரியர்களின் வேலைக்கு உலை வைத்த கொரோனா!

சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
 
அதன்படி, ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த இடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தி, தகவல்களை பதிய வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.