தொடர்புடைய செய்திகள்
- அரசின் உதவித்தொகைகளை அஞ்சல் வங்கிக்கு மாற்றவேண்டாம்… வைகோ வேண்டுகோள்!
- கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர், செலிவியர் குடும்பத்தினருக்கு அரசுவேலை - நடவடிக்கை தீவிரம்!
- கருக்கலைப்பை சட்ட உரிமையாக்க வேண்டும்… மெக்சிகோவில் பெண்கள் போராட்டம்!
- ருத்ர தாண்டவம் படத்தைப் பாராட்டி அறிக்கை வெளியிட்ட இயக்குனர் தங்கர் பச்சான்!
- நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும்… வடிவேலுவுக்கு சென்ற சம்மன்!
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தீவிரம்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,367 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,23,697 பேர் குணமடைந்த நிலையில் 828 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
