திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:45 IST)

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும்… வடிவேலுவுக்கு சென்ற சம்மன்!

நடிகர் வடிவேலு 11 ஆண்டுகளுக்கு முன்னர் சக நடிகரான சிங்கமுத்து மீது நில மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான தாம்பரத்தில் இருந்த நிலத்தை விற்றதில் தன்னுடன் இருந்த சக நடிகரான சிங்கமுத்து பல கோடிகள் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார் வடிவேலு. அது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது அந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சொல்லி வடிவேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டிசம்பர் 7 ஆம் தேதி அவர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.