1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cool weather in Coimbatore due to rain

அதிகாலை முதல் சாரல் மழை..! குளிர்ச்சியான சூழலுக்கு மாறிய கோவை..!!

rain
கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
 
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வந்தது.

கோவை மாநகர பகுதிகளான காந்திபுரம், ரயில் நிலையம், வடகோவை, உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் புறநகர் பகுதிகளான கணுவாய், பெரியநாயக்கன்பாளையம், மருதமலை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. 
 
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
About Writer
Senthil Velan
அடுத்த கட்டுரையில்
எந்த வாடி வாசலும் மூடப்படாது..! அமைச்சர் பி மூர்த்தி பேச்சு..!!