1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (15:37 IST)

மதமாற்றம் புகார் - ஆசிரியை பணியிடை நீக்கம்

school kanniyakumari
அரசு மேல்நிலைப்பள்ளியில் மதமாற்றம் புகார்  காரணமாக ஆசிரியை  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
                          
கன்னியாக்குமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் தையல் ஆசிரியராக பணி புரியும் பெண், இந்து மத மாணவிகளிடம் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசுவதாகவும், கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை கூறி திரும்ப சொல்ல சொல்லி வற்புறுத்துவதாகவும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தலைமை ஆசிரியர் முன்பு மாணவி ஒருவர் தையல் ஆசிரியை செயல்பாடுகள் குறித்து புகார் அளித்தார். இது வீடியோவாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதமாற்றம் புகார்  காரணமாக தையர் ஆசிரியை  பியாற்றிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்ய  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.